இஸ்ரவேல் தேவதாஸ் தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர் , 1970 முதல் 80 வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ். இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில் 1949- ஆம் ஆண்டு மே மாதம் 7- ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன் , தாய் திருமதி. மரிய முத்து ஆவர். இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள். இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு 8 பிள்ளைகளைக் கொடுத்தார். 5 ஆண் பிள்ளைகளும் , 3 பெண் பிள்ளைகளுமாக , தேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர். இஸ்ரவேல் தேவதாஸ் , அவர்களது குடும்பத்தில் 2- வது மகன். இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவருடைய பெயர் சாமுவேல் செல்லத்துரையாகும். 3- வது மகன் சாலமோன் , 4- வது மகன் கிறிஸ்டோபர் தாமஸ் , 5- வது சகோதரி செல்
இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே ஐ.ஜே. ஐயாத்துரை. ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார். ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார். மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார். "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா" என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி, அதற்கு இசையும