முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சகோதரர் எமில் ஜெபசிங்

 

 




நம்மை முளையாக்கவும், இலையாக்கவும் விதையானவர்களுள் சகோ. எமில் ஜெபசிங் அவர்களது வாழ்க்கையும் அடங்கும். ஜனவரி 10, 1940 அன்று மறைதிரு லு.ஊ. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது வாலிப நாட்களிலே, சகோ. P. சாம் மற்றும் சகோ. N. ஜீவானந்தம் போன்ற ஊழியர்களின் வழிநடத்துதலால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17-வது வயதில் ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஏமி. கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற தேவ ஊழியர்கள் கால் தடம் பதித்த பண்ணைவிளையிலே இவருக்கும் மிஷனரி தரிசனம் பிறந்தது. 

சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணியை இராஜினாமா செய்துவிட்டு ஊழியத்திற்குப் புறப்பட்டார். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை நிறுவியவர்களுள் ஒருவராகவும், Trans World Radio (TWR) -வின் இயக்குநராகவும் செயல்பட்டார். மே 1, 1980 -ம் ஆண்டு சகோதரர் சிலருடன் இணைந்து விஷ்வவாணி ஊழியத்தைத் தொடங்கினார்; இவ்வூழியத்தினால், சந்திக்கப்படாத கிராமங்களில் சத்தியம் ஒலித்தது, கிராமங்களில் ஆலயங்கள் உருவாகின. அநேக வாலிபர்களும் தங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர். தாழ்மையிலும், வசனத்தைப் பிரங்கிப்பதிலும் இவருக்கென்று தனி இடம் உண்டு. 'அதிசயமான ஒளிமய நாடாம்' 'கர்த்தனே எம் துணையானீர்' உள்ளிட்ட காலத்தால் அழியாத 135 பாடல்களை நமக்குத் தந்தவர். 'India Believers Fellowship' ஊழியமும் இவரது முயற்சியே. 'The Good Samaritans', 'Vishvasi Sangathi'  போன்ற இவரது ஊழியங்களால் தேவையுள்ளோர் தேவனைக் கண்டனர். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ இயக்கங்களை இணைக்கும்படியாக 'Bless India Vision 2020' என்ற திட்டத்தையும் முன்நடத்திச் சென்றார். 2000-மாவது ஆண்டில் கணையத்தில் புற்றுநோய் உண்டானபோது, தனது பெலவீனத்தின் மத்தியிலும், 13 ஆண்டுகள் கர்த்தருக்காக தொடர்ந்து ஓடி 19 டிசம்பர் 2013 அன்று இளைப்பாறுதலில் பிரவேசித்தார். சரித்திரமாய்ச் சாய்ந்த இவரது சரீரம் தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது ஊழிய வாஞ்சை, வைராக்கியம், ஆத்தும தாகம் இன்றைய இளைஞர்களைப் பற்றிப் பிடித்தால் இந்தியா சந்திக்கப்படுவது எளிதானதே. சகோதரரின் பாடல்களை www.emiljebasingh.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


மண்ணில் விதைகளாய் விழுந்தனர் அன்று

முளையாவது தெரியட்டும் நம் வாழ்விலே இன்று

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்                தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர் , 1970  முதல்  80  வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில்  1949- ஆம் ஆண்டு மே மாதம்  7- ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன் ,  தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு  8  பிள்ளைகளைக் கொடுத்தார்.   5  ஆண் பிள்ளைகளும் , 3  பெண் பிள்ளைகளுமாக ,  தேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.           இஸ்ரவேல் தேவதாஸ் ,  அவர்களது குடும்பத...

ஐ. ஜே. ஐயாத்துரை (1890 - 1973)

  இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே  ஐ.ஜே. ஐயாத்துரை.  ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார். ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார். மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார்.  "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா"  என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி,...

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா

  பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் வேலாயுதம் என்ற தாமஸ் வேதநாயகம், 1839-ம் ஆண்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட இவர், தனது மகனுக்கு வேதநாயகம் சாமுவேல் அசரியா எனப் பெயரிட்டார். 17.08.1874 அன்று பிறந்தார் பேராயர் அசரியா, 1889-ம் ஆண்டு தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர். நல்லதோர் ஜெப வீரனாகவும், வேதத்தை நன்கு கற்றறிந்த வாலிபனாகவும் வளர்ந்து வந்த இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இறையியல் பட்டமும் பெற்றார். பின்னர் 'கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (YMCA) காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். அந்நாட்களில், மிஷனரியாகப் பணிசெய்துகொண்டிருந்த உவாக்கர் ஐயரது ஊழியத்தினாலும், செய்தியினாலும் தேவனுக்காக ஊழியம் செய்ய அதிகமாக ஊக்குவிக்கப்பட்டார். 1902 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்கள் தொடங்கிய மிஷனரி சங்கத்தின்மூலம் நடைபெற்றுவந்த செயல்பாடுகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டு, இந்தியாவிலும் மிஷனரி சங்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார்.  மிஷனரி மாநாடு ஒன்றில் இவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, ஜனங்கள் ஆர்வமு...