இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே ஐ.ஜே. ஐயாத்துரை. ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார்.
ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார்.
மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார். "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா" என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி, அதற்கு இசையும் தந்து அநேகமாயிரம் பேர் இப்பாடலை பாடும்படியான ஒரு தருணத்தை ஏற்படுத்தினார். மேலும் பல பாடல்களை எழுதி மக்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் சிறந்து வளர அவர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடக்கப் பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் ஆரம்பித்து, கல்விப் பணியை உற்சாகப்படுத்தினார். இவர் கௌரவ மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும், சண்டை சச்சரவுகளையும் சுமுகமாக தீர்த்து வைத்தார். 1941ஆம் ஆண்டு இவரின் ஊழியத்தின் பயனாக ஒரு கிராமமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஒரே சமயத்தில் 88பேர் திருமுமுக்குப் பெற்றனர். இவரின் அயராத உழைப்பு பலரை ஆச்சரியப்படுத்தினாலும், தமது வாழ்வை கிறிஸ்துவுக்குள் சாட்சி பெறச் செய்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக