Skip to main content

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்


           தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர், 1970 முதல் 80 வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன்தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு பிள்ளைகளைக் கொடுத்தார்.  ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளுமாகதேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.

        இஸ்ரவேல் தேவதாஸ்அவர்களது குடும்பத்தில் 2-வது மகன்.  இவருக்கு ஒரு அண்ணன் இருந்தார்.  அவருடைய பெயர் சாமுவேல் செல்லத்துரையாகும்.  3-வது மகன் சாலமோன், 4-வது மகன் கிறிஸ்டோபர் தாமஸ், 5-வது சகோதரி செல்லக்களி, 6-வது சுகந்தி ஜெயத்தாய், 7-வது பெஞ்சமின் ஐயாத்துரை கடைசி மகளாக பேபி மரகதம் என ஒரு பெரிய குடும்பமாக மணக்காட்டில் வசித்து வந்தனர்.  ஏழைக் குடும்பமாக இருந்தாலும் அனுதினமும் குடும்பமாக ஜெபித்து தேவனையே நம்பி வாழ்ந்து வந்தனர்.

    பெற்றோர் பிள்ளைகளை நல்ல கிறிஸ்தவ நெறிமுறைகளில் வளர்த்தார்கள்.  அவர்களுடைய தாய் ஒரு ஜெபிக்கும் மாதிரியான தாய்.  பிள்ளைகள் ஆண்டவரை அறிந்து அவருக்காக வாழ வேண்டும்.  மட்டுமள்ளாது கிறிஸ்துவின் பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது தாயார் திருமதி. மரிய முத்துவிற்கு இருந்தது.  அதற்காக அவர்கள் ஜெபித்தும் வந்தார்கள்.  அவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து தியாகத்தோடு வாழ்ந்து அனைவரையும் படிக்க வைத்தார்கள்.

            இஸ்ரவேல் தேவாதாஸ் தன்னுடைய பள்ளி இறுதி வகுப்பை பாளையங்கோட்டை தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் முடிக்கும் வரை பெயர் கிறிஸ்தவனாகவே வாழ்ந்து வந்தார்.  மனக்காட்டில் உள்ள சி. எஸ். ஐ திரித்துவ ஆலயத்திற்கு ஞாயிறு ஆராதனை செல்வதுஓய்வு நாள் பாடசாலைவாலிபர் கூடுகை என சென்றாலும் கிறிஸ்துவை தனிப்பட்ட வாழ்வில் அறியவில்லை.  1965-ஆம் ஆண்டு தன்னுடைய எஸ்.எல்.சி-ஐ வெற்றியாக முடித்தார்.

இரட்சிப்பின் அனுபவம்:

            தன் பள்ளிப் படிப்பின் இறுதி நாட்களில் அமெரிக்க மிஷனெரி ஸ்டேன்ஸி ஜோன்ஸ் அவர்கள் கிறிஸ்து தரும் பாவ மன்னிப்பின் நிச்சயம்இரட்சிப்பின் அனுபவம் அனைவருக்கும் அவசியம் என்று பிரசங்கித்ததைக் கேட்ட இஸ்ரவேல் தேவதாஸ் பரிசுத்த ஆவியானவரால் உணரப்பட்டு தன்னுடைய பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று கிறிஸ்துவின் பிள்ளையானார். அப்போஸ்தலர் 2: 21-ல் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.  என்ற வசனத்தின்படி அவர் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொண்டார்.  யோவான் 2: 24 வசனத்தில் சொன்ன வார்த்தையின் படி தேவன் ஆவியாகவே இருக்கிறார்அவரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும்உண்மையோடும் அவரை தொழுதுகொள்ள வேண்டும.அனுதினமும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஆண்டவருடன் நல்ல உரவை ஏற்ப்படுத்தி அவரையே சேவித்து வந்தார்.

ஊழியத்திற்கு தேவனுடைய அழைப்பு:

            அருகில் உள்ள அவர்களது ஆலயத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களிலும் பங்குபெற்று வந்தார்.  வாலிபர் கூடுகை மற்றும் ஆவிக்குரிய கூடுகைகளிலும் உற்சாகமாக பங்குபெற்றார்.  அவருடைய தாயார் அதற்கு தேவையான அனைத்து உற்சாகத்தையும் கொடுத்தார்கள்.  இவ்விதமாக ஆவிக்குரிய வாழ்வில் அந்த வாலிப நாட்களில் வளர நல்ல வாய்ப்பு கிடைத்தது.

            திருச்சபையில் நடைபெற்ற ஒரு ஆவிக்குரிய கூடுகையில் அருள்திரு. ஸ்டீபன் அவர்கள் தேவன் பேதுருவை எவ்விதம் ஊழியத்திற்கு அழைத்தார் என்பதையும்வாழ்வில் வந்த போராட்டங்களில் அவர் எவ்விதமாக வெற்றி பெற்றார் என்பதையும் விவரமாக கற்றுக் கொடுத்தார்.  இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் யோவான் 21: 14  22 வரை உள்ள வேதபகுதியில் ஆண்டவர் சோர்ந்து பின்வாங்கிய பேதுருவை எவ்விதமாக ஊழியத்திற்கு அழைத்தார் என்பதையும்ஆயர் பிரசங்கித்தார்.  ஆண்டவர் பேதுருவிடம் கேட்ட கேள்வி யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயாஎன்றார்.  அதற்கு அவன் ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்.  அவர் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.  இந்த வசனத்தின் வழியாக தேவன் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ் அவர்களுடன் இடைபட்ட படியால் இருக்கிற இடத்தில் தேவ பணியை செய்ய வேண்டும் என்ற உந்துதலைப் பெற்று தன்னுடைய திருச்சபையில் ஒரு ஓய்வு பாடசாலையை ஆரம்பித்தார்.  தேவன் அழைத்தபடி இந்த ஆடுகளை கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும் என்ற பேராவலோடு தன் சிறுவர் ஊழியத்தை தொடங்கினார்.  அற்ப்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணலாம் என்று சகரியா 4: 10-ல் கூறியபடி முதல் முயற்ச்சியிலேயே நாற்பது சிறுவர்சிறுமியர் அந்த ஓய்வுநாள் பாடசாலைக்கு வந்தனர்.

    உலகத்தின் பின் சென்று தங்கள் வாழ்வை கெடுத்துக் கொள்கிற வாலிபர்களையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்த வேண்டும் என்ற தாகம் சகோதரர் இஸ்ரவேல் தேவதாசுக்கு ஆண்டவர் கொடுத்தார்.  எனவே வாலிபர்களுக்கென ஒரு கூடுகையை மனக்காடு சி.எஸ்.ஐ திருச்சபையில் ஆரம்பித்தார்.  வாரம் ஒரு முறை வாலிபர்களாக கூடி ஜெபித்துவேதத்தை கற்று வந்தனர்.  எஸ்.எல்.சி-வரை படித்திருந்த சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படித்து வந்தார்.  ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.  எனினும் ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து தன்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் இருந்தது.  தன்னுடைய எதிர்காலமும் நன்றாக அமைய வேண்டும் என ஜெபித்து வந்தார்.  திருநெல்வேலி பேராலயத்தில் அலுவலக பணியாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.  எனவே வேலையில் சேர்வதற்காக அழைப்பும் வந்தது.

            ஆனால் அவருடைய வாழ்வில் மிகுந்த போராட்டமாக இருந்தது.  வேலைக்கு செல்வதா? அல்லது தேவனுடைய பணியை செய்வதா? என தீர்மானம் செய்ய முடியாமல் ஜெபித்து வந்தார்.  ஆண்டவர் என்னை ஆடுகளை மேய்க்க அழைத்தாரே என்ற காரியம் அவர் மனதில் மறுபடியும் மறுபடியும் தோன்றவே தன்னுடைய தாயாரின் உந்துதலின் பேரில் இந்திய மிஷனெரி சங்கத்தில் மிஷனெரியாக செல்ல தீர்மானித்தார்.  அதற்காக விண்ணப்பத்தை ஐ.எம்.எஸ்-க்கு அனுப்பினார்.  உடனே நேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்பட்டார்.  ஒடிஷாவிற்கு மிஷனெரியாக செல்ல தன்னை ஆயத்தப்படுத்தினார்.  ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை.  எனவே மிகவும் சோர்ந்துபோய் விட்டார்.  இதைக் கேள்வியுற்ற ஆருமுகநேரி தாரங்கதாரா தொழிற்சாலையில் பணியாற்றிய அவருடைய உரவினர் கேள்விப்பட்டு நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் ஊழித்தைப் பற்றி கூறி அதற்கு விண்ணப்பம் அனுப்ப உற்சாகப் படுத்தினார்.  ஆனால் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ் அதற்கு உடன் படாமல் நாட்களை கடத்தி வந்தார்.  இப்படிப்பட்ட நாட்களில் தூத்துக்குடியில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு நடத்தின மிஷனெரி முகாமிற்கு தன்னுடைய சகோதரருடன் சென்று பங்கு பெற்றார்.  அங்கு மிஷனெரி பணி என்றால் என்ன? அதின் அவசியம் என்ன? ஏன் நாம் மிஷனெரியாக செல்ல வேண்டும் என கற்றுக் கொண்டார்.  மிஷனெரி முகாமின் செய்திகள் உள்ளத்தை ஆழமாக தொட்டன.  எனவே, அங்கே முழுமையாக தன்னை அர்ப்பணித்து மிஷனெரியாக செல்ல முன்வந்தார்.  1974-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் இணைந்தார்.  தன் தாயாரின் கணவான தன் பிள்ளைகள் ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை தேவன் இவ்விதமாக நிறைவேற்றி வைத்தார்.

Comments

Popular posts from this blog

ஐ. ஜே. ஐயாத்துரை (1890 - 1973)

  இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே  ஐ.ஜே. ஐயாத்துரை.  ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார். ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார். மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார்.  "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா"  என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி, அதற்கு இசையும

சகோதரர் எமில் ஜெபசிங்

    நம்மை முளையாக்கவும், இலையாக்கவும் விதையானவர்களுள் சகோ. எமில் ஜெபசிங் அவர்களது வாழ்க்கையும் அடங்கும். ஜனவரி 10, 1940 அன்று மறைதிரு லு.ஊ. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது வாலிப நாட்களிலே, சகோ. P. சாம் மற்றும் சகோ. N. ஜீவானந்தம் போன்ற ஊழியர்களின் வழிநடத்துதலால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17-வது வயதில் ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஏமி. கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற தேவ ஊழியர்கள் கால் தடம் பதித்த பண்ணைவிளையிலே இவருக்கும் மிஷனரி தரிசனம் பிறந்தது.  சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணியை இராஜினாமா செய்துவிட்டு ஊழியத்திற்குப் புறப்பட்டார். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை நிறுவியவர்களுள் ஒருவராகவும், Trans World Radio (TWR) -வின் இயக்குநராகவும் செயல்பட்டார். மே 1, 1980 -ம் ஆண்டு சகோதரர் சிலருடன் இணைந்து விஷ்வவாணி ஊழியத்தைத் தொடங்கினார்; இவ்வூழியத்தினால், சந்திக்கப்படாத கிராமங்களில் சத்தியம் ஒலித்தது, கிராமங்களில் ஆலயங்கள் உருவாகின. அநேக வாலிபர்க