முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சந்தியாகு

 



சந்தியாகு


#ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். திருச்சபையில் பாடல்களும், ஆங்கில தொனியிலேயே முழங்கிக் கொண்டிருந்தன. தமிழ்க் கிறிஸ்தவர்களிடையே #நற்செய்தி ஆர்வத்தைப் பெருக்குவதற்கு ஆதவன் போன்று உதித்தார் #சந்தியாகு என்ற மாமனிதர்.

#கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை நூற்றுக்கு நூறாக ஆதரித்து, அவர்களின் மதத்தைத் தழுவுபவர்கள் என்ற கருத்து பரவியிருந்த காலத்தில், இயேசு அறிமுகப்படுத்திய இறையாட்சியே உலகின் அத்தனை ஆட்சிகளுக்கும் மேலானது என்பதைத் துணிவுடன் எடுத்துரைக்கவே, #சந்தியாகு_ஐயர் பிறந்தார். #இறையாட்சி என்பது சமுதாய நலன்களையும் பொறுப்புக்களையும் சுட்டிக்காட்டி அனைத்து மக்களின் நலன்களுக்கும் அடிகோலும் என்பதைத் தம் பாடல்கள் வாயிலாகப் பறைசாற்றினார்.

"தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்" என்ற பாடலையும், "இயேசுவுக்கு நமது தேசத்தை" என்ற இறையாட்சியின் பாடலையும் எழுதி மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார்.

பசியற்றோர், பிணியாளிகள் நெருக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், நீசர் எனப்படுவோர், துன்பங்களுக்குள்ளும், படுகுழிகளுக்குள்ளும் விழுந்தோர், சத்திய வழிதப்பி நடப்போர், சிறந்து விளங்க வேண்டிய தாய்க்குலத்தோர், தீய பழக்கம், வீண்பக்தி, மாயக்கோட்பாடு ஆகியவைகளில் சிக்குண்டு கிடப்போர் ஆகிய பலவகைப்பட்ட மக்களையும், இயேசுவின் நற்செய்திக்கு நேராக அறைகூவி அழைத்தார்.

இந்துப் பின்னணியிலிருந்து வந்ததால், ஆண்டவருக்கென்று முழு வைராக்கியத்துடன் ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தவர் இவர். கணிதப் பேராசிரியராகத் தனது பணியைத் துவக்கி, பின்னர் திருச்சபைப் போதகராக முழு நேரப் பணியில் தம்மை ஈடுபடுத்தி, திருச்சபை ஒருமைப்பாட்டிற்காகப் பாடுபட்டவர். இவரின் உயிர்மீட்சிப் பாடலால் ஆயிரக்கணக்கானோர் உள்ளொளி பெற்று, நல்வழி நடந்து கிறிஸ்துவின் தொண்டராய் வாழ்ந்து வருகின்றனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்ரவேல் தேவதாஸ்

இஸ்ரவேல் தேவதாஸ்                தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து சுவிசேஷப் பணிக்கு வட இந்தியா புறப்பட்ட வாலிபர்கள் பலர் , 1970  முதல்  80  வரை தேவனுடைய இறுதிக் கட்டளைக்கு அடிபணிந்து நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வழியாக கலாச்சாரம் கடந்து சென்று வட இந்தியாவில் பணியாற்ற புறப்பட்ட செயல் வீரர்களில் ஒருவர் தான் சகோதரர் இஸ்ரவேல் தேவதாஸ்.  இவர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள மணக்காடு என்ற கிராமத்தில்  1949- ஆம் ஆண்டு மே மாதம்  7- ஆம் தேதி பிறந்தார்.  இவருடைய தந்தை திரு. பாக்கிநாதன் ,  தாய் திருமதி. மரிய முத்து ஆவர்.  இவருடைய பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர்.  நல்ல கிறிஸ்தவ பக்தியில் சிறந்து விளங்கினார்கள்.  இந்த குடும்பத்தை தேவன் ஆசீர்வதித்து அவர்களுக்கு  8  பிள்ளைகளைக் கொடுத்தார்.   5  ஆண் பிள்ளைகளும் , 3  பெண் பிள்ளைகளுமாக ,  தேவனுக்கு பயந்து அவருடைய நாம மகிமைக்காக வாழ்ந்து வந்தனர்.           இஸ்ரவேல் தேவதாஸ் ,  அவர்களது குடும்பத...

ஐ. ஜே. ஐயாத்துரை (1890 - 1973)

  இந்திய_மிஷனெரி_சங்கம் அனுப்பிய முன்னோடி மிஷனெரிகளில் ஒருவரே  ஐ.ஜே. ஐயாத்துரை.  ஐசக் இயேசுவடியான் ஐயாத்துரை என்ற முழுப் பெயர் கொண்ட இவர், 1890ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியராக தன் பணியைத் துவக்கிய இவர், நற்செய்திப் பணியில் வாஞ்சை கொண்டதின் காரணமாக, ஆசிரியர் பணியைத் துறந்து, பேராயர் வி.எஸ். அசரியாவோடு மிஷனெரியாக 1912ஆம் ஆண்டு, ஜட்சர்லா என்ற இடத்திற்கு மிஷனெரியாக பயணம் செய்தார். ஊழிய வாஞ்சையின் மிகுதியால் கிராமங்களிலேயே தங்கிவிடும் இவர், தங்குவதற்குக் கூட வீடு கிடைக்காத நிலையில் மொட்டை மாட்டு வண்டியின் அடியில் தங்கி, பல இன்னல்களையும். இடையூறுகளையும் கடந்து, மக்களுக்குத் தொண்டாற்றினார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இரட்சண்ய_யாத்திரிகம் என்ற ஒற்றைத்தாள் பிரதியை அச்சிட்டு தான் செல்லுமிடமெங்கும் விநியோகித்து வந்தார். மனந்திரும்பிய மைந்தன், இயேசுவின்_பிறப்பு, உயிர்த்தெழுதல், மோட்ச பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படம் மூலம் மக்களுக்குக் காண்பித்து, அவர்களை கிறிஸ்துவின் பாதையில் நடக்கச் செய்தார்.  "ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா"  என்ற மிகச்சிறந்த பாடலை எழுதி,...

பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா

  பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் வேலாயுதம் என்ற தாமஸ் வேதநாயகம், 1839-ம் ஆண்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட இவர், தனது மகனுக்கு வேதநாயகம் சாமுவேல் அசரியா எனப் பெயரிட்டார். 17.08.1874 அன்று பிறந்தார் பேராயர் அசரியா, 1889-ம் ஆண்டு தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர். நல்லதோர் ஜெப வீரனாகவும், வேதத்தை நன்கு கற்றறிந்த வாலிபனாகவும் வளர்ந்து வந்த இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இறையியல் பட்டமும் பெற்றார். பின்னர் 'கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (YMCA) காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். அந்நாட்களில், மிஷனரியாகப் பணிசெய்துகொண்டிருந்த உவாக்கர் ஐயரது ஊழியத்தினாலும், செய்தியினாலும் தேவனுக்காக ஊழியம் செய்ய அதிகமாக ஊக்குவிக்கப்பட்டார். 1902 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்கள் தொடங்கிய மிஷனரி சங்கத்தின்மூலம் நடைபெற்றுவந்த செயல்பாடுகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டு, இந்தியாவிலும் மிஷனரி சங்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார்.  மிஷனரி மாநாடு ஒன்றில் இவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, ஜனங்கள் ஆர்வமு...