பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார்
(1774-1864)
திருநெல்வேலி மாவட்டத்தில், ஐயம்பெருமாள் பிள்ளையின் என்பவருக்கு மகனாக 1735ம் ஆண்டு பிறந்தார் அருணாச்சலம். பக்தி முறைப்படி வளர்க்கப்பட்ட இவர், ஆறுகள், நதிகள், குளங்கள் என சுமார் ஆயிரம் இடங்களில் புனித நீராடும்படி பல யாத்திரை மேற்கொண்டபோது, நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். பணத்தை வட்டிக்குக் கொடுப்பவராக இருந்த இவர், ஏழைகளுக்கும் உதவி செய்யும் உள்ளமுடையவர். கத்தோலிக்க மத போதகர் ஒருவரைச் சந்தித்ததினால் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார்ளூ 1760ம் ஆண்டு தனது 25-வது வயதில் தேவசகாயம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார். லத்தீன் மற்றும் இறையியலைக் கற்றிருந்தபோதிலும், ஆயராகவோ இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுளூ என்றபோதிலும், உபதேசியாராக ஆலயத்தில் பணிசெய்துவந்தார். இதனிமித்தம் குடும்பத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார். 1735ம் ஆண்டு தனது 35வது வயதில் சவரிராயன் செட்டியார் என்பவரது மகளும் கத்தோலிக்க விசுவாசியுமான ஞானப்பூவை வாழ்க்கைத் துணையாகத் தெரிந்துகொண்டார். இத்தம்பதியருக்கு முதல் மகனாக செப்டம்பர் 7, 1774 அன்று பிறந்தார் வேதபோதகம். பின்னர் இவரது பெயர் வேதநாயகம் என்று அழைக்கப்பட்டது.
ஏழு வயதில் தாயை இழந்தார் வேதநாயகம்; உடன் பிறந்த சூசையம்மாள் மற்றும் பக்கியம்மாள் ஆகிய இரு சகோதரிகளும் தாயின் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டனர். தனது ஐந்தாவது வயதிலேயே இலக்கணத்தைக் கற்கத் தொடங்கினபோதிலும், தாயின் இறப்பிற்குப் பின் கல்வியில் கரிசனையற்றவராகக் காணப்பட்டார். பிற மேய்ப்பர்களுடன் மாடுகளை மேய்க்கும் நிலைக்கும் ஆளானார். 1783-ம் ஆண்டு கல்வி கற்கும்படியாக ஆசான் ஒருவரிடம் அனுப்பப்பட்டார். இந்த நேரத்தில், தந்தை தேவசகாயம் அதே குடும்பத்தைச் சேர்ந்த மரியமுத்துவை திருமணம் செய்துகொண்டார். ஞானபரம் மற்றும் பாக்கியமுத்து என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். உபதேசியாராக இருந்தபோது உண்டான மகக்கசப்புகள் நிமித்தம் தேவசகாயம் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கிளாரிந்தாவையும், ஊழியர் Colonel Beaton அவர்களையும் சந்தித்து, இயேசுவின் இரட்சிப்பின் செய்தியை அறிந்தகொண்டார் தேவசகாயம். 1785ம் ஆண்டு, தஞ்சையிலிருந்த Rev. Chritian Fredric Swatz அவர்களைச் சந்திக்க தேவசகாயத்தை அழைத்துச் சென்றார் ஊழியர் Colonel Beaton.
1785 ம் ஆண்டு திருநெல்வேலிக்கு வருகை தந்த ஜெர்மானிய மிஷனரி சுநஎ. ஊ.கு.ளுஉhறயசவண உடன் 12 வயதாயிருந்த மகன் வேதநாயகத்தை தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார் தேவசகாயம். Rev. C.T. Swatz என்பவரிடம் இளவரசர் சரபோஜி கல்வி கற்றுக்கொண்டிருந்த நாட்களில், அவருடன் இணைந்து வேதநாயகமும் கல்வி பயின்றார். தொடர்ந்து, தற்போது திருவாங்கூர் என்றழைக்கப்படும் தரங்கம்பாடியிலுள்ள லுத்தரன் செமினரியில் இறையியல் பயின்றார். கல்வியினை நிறைவு செய்து, திருவாங்கூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மிஷனரி பள்ளியில் 19-வது வயது முதல் ஆசிரியராகப் பணியாற்றினார் வேதநாயகம். கிறிஸ்தவப் பாடல்களையும், புத்தகங்களையும் எழுதத்தொடங்கினார். அவருடைய படைப்புகளில் அருமையானது 'பெத்தலகேம் குறவஞ்சி' என்ற புத்தகம். 'தந்தானைத் துதிப்போமே' 'ஆமென் அல்லேலூயா' 'இயேசுவையே துதி செய்' போன்ற பாடல்கள் இவர் இயற்றியவைகளுள் சில. சக மாணவனான சரபோஜி அரசனாக அரியணை ஏறியபோது, அவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார் வேதநாயகம். 'ஞானதீப கவிராயர்' 'வேத சாஸ்திரிகள்' 'சுவிசேஷ கவிராயர்' என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டார். இவரது பாடல்கள் சைவபக்தர்களைச் சார்ந்த தேவாரம் மற்றும் திருப்புகழ் நடையைச் சார்ந்தவை. 'ஜெபமாலை' என்ற படைப்பு தாயுமானவரின் நடையில் அமைந்தது. கிறிஸ்துவின் சுவிNசுஷத்தை அறிவிப்பதை தொடர்ந்து தன் முதற்பணியாகச் செய்துவந்தார். அரசன் சரபோஜி வேதநாயகத்தை தனது மூத்த சகோதரனாகவே பாவித்துவந்தார்.
இவர் இயற்றிய சுமார் 500 பாடல்களும், எழுதிய 133 புத்தகங்களும் கிறிஸ்தவத்திற்குக் கிடைத்த காலத்தால் அழியாச் சொத்துக்களே. இவரது பாடல்கள் இடம்பெறாத ஆராதனையே இல்லையெனும் அளவிற்கு இறைவனை ஆராதிக்க கவிகளை எழுதி கையில் கொடுத்தவர். இவரது தலைமுறையினர் ஊழியர்களாக தங்களை அர்ப்பணித்து சாஸ்திரியார் என்ற பெயருடன் திருப்பணியை இன்றுவரை தொடர்ந்து நிறைவேற்றிவருகின்றனர். தொன்றுதொட்டு இன்றும் தொடருகிறது இவரது சந்தததியின் திருப்பணி.
Comments
Post a Comment