'இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல' (மத்தேயு 18:14) என்ற பரலோக தேவனின் சிந்தையை அறிந்தோரே ஆத்தும ஆதாயப் பணியில் அவருக்காகத் தீவிரம் காட்டுவர். 'நாம் நமக்காக உருவாக்கப்பட்டவர்களல்ல, நம்மைப் படைத்தவருக்காகவே உண்டாக்கப்பட்டவர்கள்' என்ற உயரிய எண்ணமே நம்மை அவரது திருப்பணியில் ஓய்வின்றி முன்னேறச் செய்யும். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காய் தன்னையும், தனது வாழ்க்கையையும் அர்ப்பணித்த டாக்டர். R.A.C பால்; அவர்கள், 1941 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ல் பிறந்தார். பள்ளியில் சிறந்த மாணவனாகத் திகழ்ந்ததோடு, தனது உயர்நிலைக் கல்வியையும் வெற்றியுடன் முடித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்பினை தொடரமுடியாமல் இருந்தபோது, இவரது சகோதரி பிரிஸ்கில்லா அவர்கள் தனது படிப்பினை இடையிலேயே நிறுத்திக்கொண்டு, இவர் மேற்படிப்பிற்குச் செல்ல வழிவகுத்தார். இவரது சகோதரியின் தியாகத்தினால், சென்னையிலுள்ள விலங்கியல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, சிறுநீரகத்தில் ஏற்பட்ட பெலவீனத்தினால் பாதிக்கப்பட்டார், இச்சூழ்நிலை இவரை தேவனண்டை நடத்திற்று.
'காணாமல் போன ஆடு'
1960 ம் வருடம் இவரது சகோதரியின் அழைப்பின் பேரில் சென்னை வேப்பேரியிலுள்ள இம்மானுவேல் மெதடிஸ்ட் சபைக்குச் சென்றிருந்தார். இவர் சபையின் உள்ளே நுழையும்போது இடிமுழக்கம் போன்ற சத்தம் ஒலிபெருக்கியில் தொனித்துக்கொண்டிருந்தது. இவர் நுழைந்த அச்சமயத்தில் 'காணாமல் போன ஆடு யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்? அது நீதான்' என்று அந்த ஊழியர் தனது பிரசங்க வேளையில் ஆத்தும பாரத்துடன் சபைக்கு சவாலிட்டுக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஆலயத்தினுள்ளே நுழைந்த இவர் அந்தச் சவாலைக் கேட்டதும், அந்த ஊழியர் தன்னை நோக்கியே பேசுவது போல உணர்ந்தார். ஆராதனையின் முடிவிலே போதகர் வாசலில் நின்று ஜனங்களை வாழ்த்தி அனுப்பிக்கொண்டிருந்தபோது இவரது சகோதரி இவரை போதகருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் போதகர் சுநஎ. சாம் கமலேசன் அவர்களே. இவரே பால் க்கு நல்ல நன்பராகவும், போதகராகவும் இருந்து தேவனுக்கென்று பணி செய்வதில் இவரை உற்சாகப்படுத்தினார்.
'மிஷனெரிகள் தேவை'
கல்லூரி படிப்பினை 1963 ம் ஆண்டு முடித்து பட்டம் பெற்றார். வேலை கிடைப்பதற்கு அரிதான அந்நாட்களிலே, விருதுநகரிலுள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் பணிக்கென்று விண்ணப்பித்தார்; வேலையும் கிடைத்தது, தனது மருத்துவப் பணியினைத் தொடர்ந்தார். 1967 ம் ஆண்டு 'முத்துமலை' என்ற மாதாந்திர பத்திரிக்கை ஒன்றினைப் படித்தபோது, 'ஒரிசாவில் மல்கன்கிரி என்ற இடத்தில் பணிபுரிய மிஷனெரிகள் தேவை' என்ற அறிவிப்பினைப் பார்த்ததும் ஆத்தும பாரத்தினால் உந்தித் தள்ளப் பட்டார். சபையிலுள்ள தலைவர்களுடனும், இந்திய மிஷனெரி சங்கத்தில் (IMS) உள்ளவர்களுடனும் தனது அழைப்பினைக் தெரிவித்ததோடு, தனது வேலையையும் இராஜினாமா செய்துவிட்டு ஆதிவாசி மக்கள் வாழுகின்ற மல்கன்கிரிக்கு மிஷனெரியாகச் செல்லத் தயாரானார்.
1967 ஜனவரி 17 அன்று சென்னையில் நன்பர்களையும், உறவினர்களையும் வி;ட்டுவிட்டு ஒரிசாவிலுள்ள மல்கன்கிரிக்குப் புறப்பட்டார். நான்கு சக்கர வாகனமொன்றில் மேலும் இருவருடன் மல்கன்கிரியை அடைந்தார்;. 'கோயாஸ்' என்றழைக்கப்படும் மக்கள்; மத்தியில் முதன்முறையாக இவர்கள் சென்றபோது, அவர்களது தோற்றம், உடைகளும் மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டது. நகரத்திலேயே வாழ்ந்த டாக்டர். பால் ஆதிவாசி மக்கள் மத்தியில் அவர்களுடன் வாழத்தொடங்கினார். மிகக்குறைந்த ஆதிவாசி மக்களே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாயிருந்தார்கள். விஷ அம்புகள், கத்திகள், போன்றவைகளை அவர்கள் அதிகம் பயன்படுத்தியதோடு, விழாக்கள் நடைபெறும்போது ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்வதும் அம்மக்களது வழக்கமாயிருந்தது. இம்மக்களைப்பற்றி முன்னதாகவே இவர் அறிந்திருந்தார், இதுவே இவரை இங்கு பணிபுரிய ஏவியது. அந்நேரத்தில் இந்திய மிஷனெரி சங்கம் (IMS) இவரை அப்பகுதியில் ஒரு பணித்தளத்தைத் தொடங்கும்படிக்குக் கேட்டுக்கொண்டது. அச்சமயத்தில் திரு. பால்ராஜ் என்பவரும் இவருடன் அப்பணியில் இணைந்துகொண்டார்.
மலைகளில் வாழுகின்ற போண்டாஸ் இன மக்கள் மிகவும் கொடூரமானவர்களாகவே காணப்பட்டனர். தங்களை எதிர்க்கிறவர்களை அவர்களது விஷ அம்புகளினாலே கொன்றுவந்தனர். இவர்களுடைய சமுதாயத்தில் மிகக்குறைந்த புருஷர்களே காணப்படுவதுண்டு, ஏனெனில், அநேகர் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்வதினால் உயிரை மாய்த்து வந்தனர். வாரத்தில் நான்கு முதல் ஐந்து பேர் வரை சாதாரணமாகக் கொல்லப்பட்டனர். ஆண்களும், பெண்களும் மது அருந்தி சீர்கெட்ட நிலைமைக்குள்ளாகக் காணப்பட்டனர். பிறந்த குழந்தையின் நாக்கிலே மதுபானத்தைத் தொட்டு வைப்பதினால், காட்டிலுள்ள ஆவிகள் தொடாது என்ற மூட நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.
மக்களின் கொடூரமான செயல்களையும், குணங்களையும் மற்றும் அவர்களது நடவடிக்கைகளையும் கண்டு தனது தரிசனத்தில் எந்த விதத்திலும் இவர் தடுமாறிப்போகவில்லை. தேவனண்டை அவர்களைத் தி;ருப்பும் நோக்கில்; வேதபாட வகுப்பினை ஏற்படுத்தி வேத வசனங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இந்த வேதபாட வகுப்பில் அநேக மக்கள் கலந்துகொண்டதோடு, அவர்கள் பல குழுக்களாக கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியினை அறிவிக்கவும் தொடங்கினார்கள். இது அந்த ஜனங்களிடையே பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. தன்னுடைய மொழிபெயற்புத் திறனையும் அதிகம் பெருக்கிக்கொண்டார். 'தேசியா' என்ற கோயாஸ், கோண்டாஸ் மக்கள் பேசுகின்ற மொழியையும் கற்றுத் தேர்ந்தார்.
தரிசனத்திற்கேற்ற துணை
தூயரின் பணியில் துணிந்து நின்ற இவருக்கு ஏற்ற துணையைத் தேவனே தெரிந்தெடுத்தார். தேவ திட்டத்தின்படி 1972 ஜனவரி 24 அன்று டாக்டர். ஐரிஸ் அவர்களுடன் மணவாழ்க்கையில் இணைந்தார். திருமதி. பால் அவர்கள் ஆல்பர்ட் சுவிட்சர் ன் வாழ்க்கைச் சரித்திரத்தை வாசித்த நாட்களில், ஆப்பிரிக்காவிலுள்ள மிஷனெரிகள் மத்தியில் ஊழியஞ் செய்யயும்படியான வாஞ்சையுடையவராயிருந்தார்; இவரும் டாக்டர். சாம் கமலேசன் அவர்களது செய்தியினால் தொடப்பட்டதோடு, ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான ஜனங்கள் இருப்பதனை உணர்ந்தார். தனது மருத்துவ படிப்பினை முடித்தபின்னர், ஏற்ற துணையைத் தேடிக்கொண்டிருந்தார். 'ஆடுகள் மேய்ப்பனையல்ல, மேய்ப்பனே ஆடுகளைத் தேடவேண்டும்' என்ற கோட்பாட்டில் உறுதியுடன் இருந்த ஐரிஸ், மலைகளில் உள்ள காணாமல் போன ஆடுகளைத் தேடும் பணியில் இவருடன் இணைந்து செயல்பட்டார். தன்னுடைய மருத்துவ படிப்பினை மக்களை இறைவனண்டை சேர்க்கும் பணிக்கென்றே பயன்படுத்தினார். கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும் தேவபணி செய்வதிலேயே கவனமாயிருந்தார்.
இறுதி நாட்கள்
போண்டாஸ் மக்களைத் தேவணன்டை நடத்துவதிலேயே பால் அதிகம் அக்கரையுள்ளவராயிருந்தார். இவரது தரிசனத்தை முற்;றிலுமாய் நிறைவேற்றும் நோக்கத்தில், 1973 ம் ஆண்டு IEM -ல் இணைந்தார். டாக்டர். தியோடர் வில்லியம்ஸ் இவர்களை ஊக்குவித்தார். தனது 36 வது வயதில் உடல் பெலவீனத்தினால் பாதிக்கப்பட்டு, வெல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். அப்போது அவரது சிறுநீரகம் பெலவீனப்பட்டிருப்பது தெரியவந்தது. 1986 ம் வருடத்தில் இவரது உடல்நிலை அதிகம் மோசமடையத் தொடங்கியது; இதன் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1986 செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற அறுவை சிகிச்சை பலனளிக்காததினால் மறுவுலகில் பிரவேசித்தார். சமுதாயம் கண்டு அஞ்சுகின்ற ஜனங்களை இறைவனண்டை திருப்பும் பணியில் இறுதிவரை சோர்ந்துபோகாமல், ஆத்துமாக்களுக்காகவே தனது ஆயுளை செலவிட்டுச் சென்ற டாக்டர். பால் அவர்களின் வாழ்வு இன்றும் அப்பகுதியில் அழிக்க இயலாத சரித்திரமாகவே காணப்படுகின்றது.
Comments
Post a Comment