தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சாலம்பாளையம் எனும் கிராமத்தில் கிறிஸ்துவை அறியாத ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தார். எட்டுவருட பள்ளிப் படிப்பிற்குப் பின்னர், தந்தையைப் போன்றே ஆசிரியராக விரும்பினார். விழுப்புரம் அருகில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 1951-ம் ஆண்டு பணி நியமன ஆணை கிடைத்ததும், சென்னைக்கு இடம்யெர்ந்து ஆசிரியர் பணியினைத் தொடர்ந்தார். திராவிட முன்னேற்ற கட்சியின் மீது இருந்த அதிகமான பற்றினால், கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிர தொண்டனாகப் பணியாற்றிவந்தார். 1957-ம் ஆண்டு லேமென் சுவிசேஷ ஐக்கியத்தின் மூலமாக கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொண்டார்; இரட்சிக்கப்பட்டு புது வாழ்வினைத் தொடங்கினார். இரட்சிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுவிசேஷகராக கிறிஸ்துவின் நற்செய்தியினைப் பிரசங்கிக்கத் தொடங்கினார். 1960 -ம் ஆண்டு பரிசுத்த ஆவியின் நிறைவினைப் பெற்று, பகுதி நேரமாக ஊழியத்தைத் தொடர்ந்தார். 1968 -ல் தனது ஆசிரியர் பணியினை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேரமும் கர்த்தருக்கென்று ஊழியம் செய்யத் தொடங்கினார். அந்நாட்களில், ACA சபையுடன் நெருக்கமாக இருந்தவராக ஊழியம் செய்துவந்தார். 1975 -ம் ஆண்டு: C.P.D அருமைநாயகம் அவர்களின் முயற்சியில், முதன்முறையாக கடல் கடந்து சென்று, யாழ்ப்பாணம் பகுதிகளில் நற்செய்திக் கூட்டங்களில் பிரசங்கித்தார்.
சென்னையில் போதகர் ஜீவானந்தம் அவர்கள் நடத்திவந்த முழு இரவு ஜெபங்கள், சென்னைப் பட்டணத்தல் அநேகரை கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக எழுப்பியது. சகோ. D.G.G தினகரன் அவர்கள் இந்த முழு இரவு ஜெபங்களில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கம். 1983 முதல் 1990 வரை World Missionary Evangelism, Madras என்ற ஸ்தாபனத்தை நிறுவினார். 1990 -ம் ஆண்டு தேவனுடைய தரிசனத்தைப் பெற்றவராக, 'மகிழ்ச்சி' (Delight Christian Assembly) என்ற திருச்சபையினைத் தொடங்கினார். 'மகிழ்ச்சி' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ஸ்தாபகராகவும் செயல்பட்டுவந்தார். கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட போதகர் ஜீவானந்தம் மூலமாக போதகர் D. மோகன் (NLAG, Chennai) கிறிஸ்துவின் ஊழியத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். திருக்கரத்தால் தாங்கி என்னை' என்ற பாடலை இயற்றிய சகோ. J.V. பீட்டர் அவர்களை தான் செல்லும் இடமெல்லாம் அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவரை கூடவே தங்கவைத்திருந்தார். அநேக தேவமனிதர்களை உருவாக்கிய போதகர் ஜீவானந்தம் 16 அக்டோபர் 2006 அன்று பரம வீட்டில் பிரவேசித்தார்.
Comments
Post a Comment